states

img

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு  

ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானர். 14 பேர் காயமடைந்தனர்.  

ஜம்மு காஷ்மீர் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ஒருவர் பலியானார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.  

இந்த சம்பவம் குறித்து  ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உதம்பூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் குறித்து விரைந்து விசாரிக்க ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.